
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான ‘டிசி’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.30 கோடி வசூலித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ரூ.5.25 கோடியுடன் தொடங்கிய வசூல், திங்கள்கிழமை ரூ.6.50 கோடியாக உயர்ந்து, முதல் நாளை விட 23 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக அளவில் இப்படம் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளதுடன், இந்த வார இறுதிக்குள் வசூல் ரூ.40 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.