
ஸ்பெயினின் ஃகியூட்டா மற்றும் மெலிலா பகுதிகளில் கடல் வழியாக சுமார் 60,000 அகதிகள் நுழைந்ததால் ஏற்பட்ட நெரிசல் மற்றும் விபத்துகளில் 35 முதல் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கடல் வழியாக வரும் அகதிகளைத் திருப்பி அனுப்பக்கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த அகதிகள் வருகை அதிகரித்துள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
அகதிகளுக்குப் போதிய உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படவில்லை என ஐ.நா. அமைப்பு விமர்சித்துள்ள நிலையில், ஸ்பெயின் பாதுகாப்புப் படையினர் அகதிகளை மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்புவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.