
இந்தியாவின் தலைமையின் கீழ் டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் மாநாட்டில் சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் 7 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் 50 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 5 ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைப் பிரிக்ஸ் நாடுகளே உருவாக்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.