
எம்.ஜி.ஆர் இயக்கத்தில் வெளியான 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் தனது 83-வது வயதில் காலமானார்.
பாங்காக்கில் உள்ள தனது இல்லத்தில் காலமான அவர், அல்சைமர் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற 'பச்சைக்கிளி... முத்துச்சரம்' பாடலில் எம்.ஜி.ஆருடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் அவர் நீங்கா இடம் பிடித்திருந்தார்.