
குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 121 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மாவின் சதங்களின் உதவியுடன் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட மகளிர் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.