
2030-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (AI) உலக அழிவுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை முற்றிலும் ஏற்பதில்லை என்றும், அதற்கான வாய்ப்பு 0% என்றும் என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார்.
Anthropic நிறுவன ஆராய்ச்சியாளர் ஈவன் ஹுபிங்கர், அடுத்த பத்தாண்டுக்குள் AI மனித அழிவுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு 10% வரை இருக்கலாம் என்று தனிப்பட்ட கருத்தாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
AI வளர்ச்சியை நிறுத்துவதோ அல்லது வேகத்தைக் குறைப்பதோ தேவையில்லை என்றும், பாதுகாப்பான முறையில் அதை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஹுவாங் கூறியுள்ளார்.