
தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரியும் எஸ்.ஐ.ஆர். ரத்து செய்யக் கோரியும் நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ள டெல்லி போலீசார், ஜந்தர் மந்தர் மற்றும் புதுடெல்லி பகுதிகளில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு உணவு ஆர்டர்கள் வழங்கவோ அடைக்கலம் கொடுக்கவோ கூடாது என வியாபாரிகளுக்கும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.