
துலீப் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடும் கிழக்கு மண்டல அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் அர்ப்பணிப்பை கேப்டன் இஷான் கிஷன் பாராட்டியுள்ளார்.
மத்திய மண்டல அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 13 ஆண்டுகளுக்குப் பிறகு அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற வேட்கையுடன் ஷமி உள்ளூர் போட்டிகளிலும் தீவிரமாகச் செயல்படுவதாக இஷான் கிஷன் தெரிவித்தார்.