
நவம்பர் மாதம் நுங்கம்பாக்கத்தில் நடைபெறவுள்ள சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்-2026 போட்டிகளை நடத்த முதல்வர் விஜய் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் தலைமையிலான குழுவினர் முதல்வரைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையமாக மாநிலத்தை மாற்றும் நோக்கில், உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை வகிக்கிறார்.