
தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள் உள்ளிட்ட 52 முதுநிலைக் கோயில்களில், செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோயில் வளாகத்திற்குள் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்க பிரத்யேகப் பாதுகாப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதற்கு ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என்றும், இதைக் கண்காணிக்கத் தவறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.