
உக்ரைன் போரில் தோல்வியடைந்தால் தூக்கிலிடப்படுவோம் என்ற அச்சத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரை முடிவுக்குக் கொண்டுவர தயங்குவதாக 'தி எகனாமிஸ்ட்' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 2025 நிலவரப்படி, டொன்பாஸ் பிராந்தியத்தின் சுமார் 70 சதவீத பகுதியை ரஷ்ய ஆயுதப் படைகள் கட்டுப்படுத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பலவீனத்தைக் காட்ட விரும்பாத புதின் போரைத் தொடரவே முடிவெடுத்துள்ளார்.