/nakkheeran/media/media_files/2026/10/16/115-2026-10-16-11-40-50.jpg)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படம் சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடலை உருவாக்கியதாகக் கூறி, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.
சந்திப்பின்போது, திருநங்கைகளுக்கு எதிரான வெறுப்புணர்வை ஒழிக்க கடுமையான விதிகளை அமல்படுத்தவும் பிரத்யேக உதவி எண்களை உருவாக்கவும் கார்த்திக் சுப்புராஜ் விடுத்த கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.
மேலும், அமைச்சர் வன்னி அரசு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு கோரியதாகவும், அதற்கு இயக்குநர் கண்டிப்பாக எடுப்பதாகக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.