
தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் அவருக்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்தப் பயணத்தின் போது லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார்.
மேலும், லண்டனில் உள்ள 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேஸிங் சர்க்யூட்' வசதிகள் மற்றும் சுற்றுப்பாதையை பார்வையிட உள்ள இக்குழுவினர் செப்டம்பர் 17-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகின்றனர்.