
தமிழக முதல்வர் விஜய் அக்.2-ம் தேதி தொடங்கி வைத்த தவெக அரசின் மகளிருக்கான 'வெற்றிப் பயணம்' இலவச பேருந்து திட்டத்தில், புறநகர் பேருந்துகளின் முகப்பில் உள்ள எல்இடி திரைகளால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.
எல்இடி திரையில் 'வெற்றிப் பயணம்' என்ற பெயர் நிலையாக வைக்கப்பட்டு, பேருந்து செல்லும் இடம் மற்றும் வழித்தடங்கள் ஓடும் வகையில் உள்ளதால், குறிப்பிட்ட ஊர் பெயரை அறிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உடனடியாக சரி செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.