
முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்; இதில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் சிறையில் இருந்து கைதிகள் தப்பித்தது போன்ற விவகாரங்களைத் திசைதிருப்பவே இந்தச் சோதனை நடத்தப்படுவதாக நேரு குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே நில அபகரிப்பு வழக்குகளைச் சந்தித்ததைப் போலவே, இந்த வழக்குகளையும் நீதிமன்றம் மூலம் தி.மு.க சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்று அவர் கூறினார்.