
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி கட்டாயமாக 30 நாள் செல்லுபடியாகும் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என டிராய் அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாற்றத்தால் ஒரு ஆண்டில் செய்ய வேண்டிய ரீசார்ஜ் எண்ணிக்கை 13-ல் இருந்து 12 ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதந்தோறும் ஒரே தேதியில் ரீசார்ஜ் புதுப்பிக்கும் வசதியையும் அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும் என புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.