
கர்நாடக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 6,500 கனஅடியில் இருந்து இன்று காலை 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது, மேட்டூர் அணைக்கு 7,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியுள்ளது, அதேசமயம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒகேனக்கல்லில் 15-ஆவது நாளாக பரிசல் இயக்கத் தடை நீடிக்கிறது.