
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அமமுக, ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் இணைந்து போராடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பா.ஜ.க உள்ளிட்ட தோழமைக் கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.