
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு ஆதரவு திரட்ட, அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான விஜய் இன்று தாராபுரத்தில் ரோடு ஷோ நடத்தினார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்ட விஜய்க்கு உடுமலை சாலை வரை வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசார வாகனத்தை நோக்கி மனு கொடுக்க வந்த பெண்ணைக் கவனித்த விஜய், வாகனத்தை நிறுத்தி அவரிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்டு பிரசாரத்தைத் தொடர்ந்தார்.