/nakkheeran/media/media_files/2026/10/30/hc-2026-10-30-18-59-52.jpg)
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கோயிலின் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரிப்பதோடு அதன் நிர்வாகத்தைத் தொடர்ந்து கண்காணிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி. பாரதிதாசன் மற்றும் ஆர். சுரேஷ்குமார் அடங்கிய குழுவை நீதிபதிகள் நியமித்தனர்.
மேலும், கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்கவும், காணாமல் போன மதிப்புமிக்க பொருட்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.