
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1,439 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தாராபுரம், காங்கேயம், குண்டடம் உள்ளிட்ட பல ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராமங்களில் குடிநீர் இணைப்புகள் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், மதுராந்தகம் தொகுதியில் தடுப்பணை சீரமைத்தல், நெல் கொள்முதல் நிலையங்கள், புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.