
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில், பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026-ஐ மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தினார்.
வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான மற்றும் காலவரம்பிற்குட்பட்ட தண்டனை வழங்குவதை இந்த மசோதா உறுதி செய்கிறது.
மசோதா அறிமுகத்தின் போது ஏற்பட்ட கடும் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.