
கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா பதிரகே 89.75 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்ற, இந்தியாவின் யஷ் வீர் சிங் 85.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தனது முதல் 3 முயற்சிகளில் 77.41 மீட்டர் மட்டுமே எறிந்ததால், முதல் 8 இடங்களுக்குள் வர முடியாமல் தொடரிலிருந்து வெளியேறினார்.