
குழந்தைகள் மற்றும் டீன்-ஏஜ் பயனர்களின் பாதுகாப்பிற்காக, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிற்கு தினசரி 2 மணிநேர கால வரம்பை மெட்டா நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
அமெரிக்க மாகாண அரசுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ரூ.1,71,000 கோடி மதிப்பிலான சமரச உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயலிகளைப் பயன்படுத்த முடியாத 'நைட் மோட்' அம்சம் மற்றும் 13 வயதுக்கு உட்பட்டோரைத் தடுக்க AI வயது சரிபார்ப்பு முறை அமலாகிறது.