
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டபோது காவல் ஆணையர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுக எம்பி கலாநிதி வீராசாமி மீது வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவத்தின் போது காவல் துறையினரை நோக்கி அவதூறான சொற்களைப் பேசியதாகவும், அரசு அதிகாரிகளின் கடமையை செய்ய விடாமல் தடுத்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய சேகர் பாபு, கலாநிதி வீராசாமி மற்றும் காவல் துறையினருக்கு எதிராக செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 10 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.