தமிழக அரசு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து ஐந்து நிறுவனங்களிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே மின்சார வாரியம் ரூ.2 லட்சத்து 48 ஆயிரம் கோடி கடனில் இருக்கும்போது, இந்த நடவடிக்கை மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட உள்ள நிலையில், காவிரி நீரைப் பெறுவதற்கு முதல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.