
ஏமனில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர் இந்த ஆண்டு மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 3 வாரங்களில் இடம்பெயர்ந்த சுமார் 1.3 லட்சம் பேரில் 71,000 பேர் குழந்தைகள் என UNICEF தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏமனில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 22 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் தொடக்கம் முதல் மோதல்களில் 15 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடரும் வன்முறை காரணமாக கடந்த மூன்று வாரங்களில் 243 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.