
இஸ்ரேலில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எவருக்கும் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் 67 பேரின் ஆதரவுப் பரிந்துரையைப் பெற்ற ஐசன்கோட்டை ஆட்சி அமைக்க அழைப்பதாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
ஆட்சி அமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆதரவைத் திரட்டத் தவறினால் இஸ்ரேல் மீண்டும் பொதுத்தேர்தலை சந்திக்க நேரிடும்.