
புதுச்சேரியில் தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் சாம் ஹார்பர் சதம் அடித்து 101 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்திய ஏ அணி சார்பில் ஷாம்ஸ் முலானி மற்றும் நச்சிகெட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.