
கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஐபோன் வாங்கும் ஆசையில், தனது காதலனை ஏவி 65 வயது தாத்தாவை கொலை செய்த 13 வயது பேத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
தாத்தா அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடிக்க, சிறுமி தனது காதலன் மற்றும் அவனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இந்த கொலையைச் செய்துள்ளார்.
செல்போன் டவர் ஆய்வின் மூலம் குற்றவாளிகளைக் கண்டறிந்த போலீசார், சிறுமி உட்பட 4 பேரையும் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.