
சென்னை தலைமைச் செயலகத்தில் இணையவழியில் வருகையில்லா ஆவணப் பதிவு (Presenceless Registration) திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே பதிவு செய்ய முடியும்.
அரசு தனது 100 நாள் சாதனை மலர் மற்றும் 'ஒரு புதிய தொடக்கம்' என்ற காலப்பேழை புத்தகத்தையும் முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.