
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சர்களைக் கிண்டல் செய்து பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை 'சாமி அமைச்சர்' என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறிப்பிட்டபோது, முதல்வர் விஜய் அவையில் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
விவசாயிகள் போராட்டம் செய்யாமல் இருந்த முந்தைய ஆட்சியைப் பற்றி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதற்கு, நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்து விவாதம் நடைபெற்றது.