
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய ஏவுகணை அமைப்புகளின் தயாரிப்பு தொழில்நுட்பங்களை உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாதுகாப்புத் துறையில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தித் திறனை வலுப்படுத்தவும் இந்த தொழில்நுட்பப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
தகுதியான நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை விதிகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கு உட்பட்டு மட்டுமே இந்த ஏவுகணை தயாரிப்பு தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.