
தாலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் உயர்நிலைக் கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 24 லட்சமாக உயர்ந்துள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட கூடுதலாக 2 லட்சம் சிறுமியர் பள்ளிக் கல்வியை இழந்துள்ள நிலையில், 2030-க்குள் இந்த எண்ணிக்கை 40 லட்சமாக உயர வாய்ப்புள்ளது.
பெண் ஆசிரியர்கள் மீதான தடையால் கல்வித்துறையில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, 10 வயதுடைய குழந்தைகளில் 90% பேருக்கு வாசிக்கத் தெரியவில்லை என அறிக்கை கூறுகிறது.