/nakkheeran/media/media_files/2026/10/19/mks-cm-vijay-1-2026-10-19-09-50-10.jpg)
தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிவகங்கையில் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், த.வெ.க நிர்வாகிகள் கஞ்சா மற்றும் மெத் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு காவல்துறையின் அலட்சியத்தை கண்டித்துள்ளார்.