
ஜெர்மனியின் Hamberger நிறுவனம், இதயத் துடிப்பின் அசாதாரண மாற்றங்களைக் கண்டறிந்து மாரடைப்பை முன்கூட்டியே எச்சரிக்கும் ஸ்மார்ட் டாய்லெட் சீட்டை உருவாக்கியுள்ளது.
இந்த இருக்கையில் அமரும்போது 30 விநாடிகளில் இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டு, ஆபத்து இருந்தால் மொபைல் மூலம் அவசர உதவிக்கு சிக்னல் அனுப்பப்படும்.
இதய நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் இதய ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிக்க இந்தத் தொழில்நுட்பம் உதவும்.