
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ‘டாவ் ரோபோடிக்ஸ்’ நிறுவனம் வீட்டு வேலைகளைச் செய்யக்கூடிய புதிய அதிநவீன ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 4.4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோக்கள் தரையைச் சுத்தம் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல் உள்ளிட்ட பல வேலைகளைச் செய்யும் திறன் கொண்டவை.
பெரிய வணிக நிறுவனங்களில் இத்தகைய ரோபோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.