
நத்தத்தில் நடந்த டிஎன்பிஎல் லீக் போட்டியில், கோவை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்த நிலையில், திருப்பூர் அணி 18 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.
திருப்பூர் அணியின் அமித் சாத்விக் 66 ரன்கள் குவித்து ஆட்டநாயகனாகத் திகழ்ந்ததோடு, பந்துவீச்சில் நடராஜன் மற்றும் சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.