
13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும், இரவு நேர இணைய பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டில்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது.
சமூக ஊடகங்களில் தணிக்கையற்ற பாலியல் உள்ளடக்கங்கள் சிறுவர்களைப் பாதிப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், வயது சரிபார்ப்பு முறைகளை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவு எடுக்க அறிவுறுத்தினர்.