
திருவள்ளூர் மாவட்டம் தொட்டாரெட்டிக்குப்பம் கிராமத்தில் பெண் ஒருவர் ஆசிட் வீசி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு அரசு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், விருத்தாசலம் பகுதியில் 30 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வெளியேற்ற முயற்சிப்பதை அரசு தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.