
கர்நாடகாவின் ஹனுார் வனப்பகுதியில் கடந்த 15-ம் தேதி வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர்கள் மிக அருகில் இருந்து சுடப்பட்டது உறுதியாகியுள்ளது.
பலியான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபாஸ்டின் டேவிட் குமார் ஆகியோர் 10 அடிக்கும் குறைவான தூரத்தில் இருந்து 'பம்ப் ஆக் ஷன் ஷாட் கன்' மூலம் சுடப்பட்டுள்ளனர்.
இந்த என்கவுன்டர் போலி என குற்றம் சாட்டியுள்ள கர்நாடக பா.ஜ.க தலைவர் விஜயேந்திரா, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.