
மத்திய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8 அன்று தமிழக எம்பிக்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்திற்கு, லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்களுக்கு தமிழ்நாடு இல்லம் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறைப் பணிகளால் தமிழகத்திற்கு ஏற்படும் விளைவுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.