
சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற 'மாணவர்கள் குரல்' கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஈ.வெ.ரா. பற்றி புகழ்ந்து பேசிய ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் முகமான காமராஜர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியின் சாதனைகள் மற்றும் பெருமைகளை அவர் பேசாதது தமிழக காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.