
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மழையால் 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில், கயானா அணி ஹெட்மயர் அடித்த 111 ரன்களுடன் 185 ரன்களைக் குவித்தது.
டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பகோ அணி, 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.