
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விதிகளின்படி, ஏர்டெல் நிறுவனம் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் மட்டுமே கொண்ட புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.185, ரூ.203 மற்றும் ரூ.206 ஆகிய விலைகளில் இந்த மூன்று புதிய திட்டங்கள் ஏர்டெல் இணையதளம் மற்றும் செயலியில் செயல்பாட்டில் உள்ளன.
டேட்டா இல்லாமல் குரல் அழைப்பு மற்றும் குறுந்தகவல் சேவை மட்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.