
உக்ரைன்-ரஷியா போர் 1,612 நாட்களாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார்.
இந்தச் சந்திப்பின்போது ரஷியா உடனான போர் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதோடு, அமெரிக்காவிடமிருந்து கூடுதல் ஆயுதங்கள் வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், உக்ரைனுக்குத் தேவையான கூடுதல் உதவிகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.