மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல்களால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது.
தனது தேவையில் 88 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதியை நம்பியுள்ள இந்தியாவுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதனால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு 200 பில்லியன் டாலரைத் தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பணவீக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.