
இளையராஜா தனது பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி, சரிகமா இந்தியா நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடல் தொடர்பாக இளையராஜா உரிமை கோரியதை சரிகமா நிறுவனம் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இளையராஜாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி, விற்பனை செய்து அந்தத் தொகையைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என சரிகமா கோரிக்கை விடுத்துள்ளது.