
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது 21 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 22-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2005-ல் மதுரை மாநகரில் விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேமுதிக, 2011 சட்டமன்றத் தேர்தலில் 29 இடங்களை வென்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரான வரலாற்றுச் சாதனையை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இந்த ஆண்டு 2026 நாடாளுமன்றத்தில் முதல் உறுப்பினரைப் பெற்றுள்ளதாகவும், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று விஜயகாந்தின் குரலை ஒலிக்கச் செய்துள்ளதாகவும் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.