
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷின் 56ஆவது திரைப்படமான 'D56' படத்தின் பணிகள் மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் தொடங்கியது.
சித்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நாக வம்சி, பிரைமார்க் புரொடக்ஷன்ஸ் ஹரிதா லிங்கசாமி மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படபூஜையை முன்னிட்டு பொதுமக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்ட நிலையில், சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.